அது ஒரு உளவியல் ரீதியாக மனிதர்களை மட்டுப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்ளும் எல்லாரும் ஒரு விதத்தில் “பாப்புலாரட்டி பைத்தியங்கள் “. தான்.
ஒரு காலத்தில் கேலரியில் மக்கள் அமர்ந்திருக்க கீழே களத்தில் மனிதர்களை மோதவிடுவார்கள். வலுத்தவர்கள் எல்லாம் முதலில் வலு இல்லாதவர்களை தூக்கி எரிவார்கள். வெளியே மக்கள் ஆர்ப்பரிப்பார்கள். அந்த சிவப்பு ரிப்பனை தூக்கி எரி.. உனக்கு ஒரு டாலர் தரேன் என்பார்கள். இந்த குண்டன் முக்கை உடைச்சு வெளியே தள்ளு 5 டாலர் என விளையாடுவார்கள். அடுத்து அந்த வலுத்தவர்களுக்குள்ளே தொடங்கும். ரத்தம் வடிய வடிய அடித்துக்கொள்வார்கள். வெளியே இருப்பவர்கள் சிரிப்பார்கள். அது ஒரு நிகழ்ச்சி... தன் அக வக்கிரங்களின் வடிகாலாக அந்த நிகழ்ச்சியை சொல்லுவார்கள்.
அதன் நவீன வடிவம் தான் பிக்பாஸ்.
அதில் பங்கேற்கும் பலரும் ஒரு விதத்தில் “செலிபிரேட்டி பைத்தியங்கள் “ கூடவே அதுக்கு கொஞ்சம் காசும் கொடுக்கிறாங்க என்பதுதான். பார்க்கும் மக்கள் எல்லாரும் முட்டாளாக்கிவிடலாம் என்பதுதான் அதன் அடிப்படை நோக்கம்.ஆனால் அதனை நிஜமென நம்ப வைப்பார்கள்.
அதில் பேசப்படும் எல்லாமே சமூக கழிவுகளின் எச்சம்தான். ஆனால் என்ன ஒன்று... ஒரே சமயத்தில் கோடி பேர்களை சென்றடைகிறது. அதுதான் பிரச்சினை.
படிப்பு கெளரவமா என்றால் இல்லை.
படிப்பு முக்கியமா என்றால் ஆம் முக்கியம். ரொம்ப முக்கியம்.
ஒரு படிப்பு பல வாசல்களை திறக்கும் திறவுகோல். இதனை செய்ய இன்னொரு கருவி இருக்கிறதா என்றால் அது பணம். பரம்பரை பணம்.
காமராசர் ஜெயிச்சாரு டெண்டுலர் ஜெயிச்சாருனா அது வேற கதை. அவங்க படிக்க போகாம ஒருத்தர் டெய்லி பேப்பர் படிச்சி அரசியல் தெரிஞ்சு இருந்தாரு. தன்னை தயார் படுத்துகிட்டாரு. இன்னொருத்தர் கிரிக்கெட் பேட்டோட கிடந்தாரு. அவரும் தன்னை தயார் செய்துகொண்டிருந்தார். அதுவே ஒரு கல்விதான். ஜெயகாந்தன் படிக்கலனா ... அந்த சங்கீ படிச்சா என்னா படிக்காட்டி என்ன ? முழுக்க வக்கிரங்கள் நிரம்பிய மனம் அது.
படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கல ... என்பது இன்னொரு குற்றச்சாட்டு. உன் படிப்பை ஆயிரம் பேர் படிக்கும் போது அதில் நீ எந்த இடம் என்பதிலும் படிப்பின் ஆழம் என்ன என்பதும் அதில் இருக்கிறது. ஆனால் அந்த படிப்பு அவனை அடிமையாக உழைக்க விடாது. உழைப்பை சுரண்ட விடாது. இந்த இடத்தில் தான் கல்வி நம்மை சிந்திக்க வைக்கிறது.
இந்த சிந்தனையை உடைக்கத்தான் சீமான் வகையறாக்கள் படிப்பு முக்கியமில்லை என்கிறார்கள். அதன் வழியாக விவசாயம் என்பதை குளோரிபை செய்கிறார்கள். உன் அப்பனும் தாத்தானும் நல்லா உழைப்பாளிகள் தான். விவசாயம் செய்தார்கள் தான். ஆனால் ஏன் நிலமெல்லாம் இன்னொருத்தன் கைகளில் சிக்கியது. அறியாமை. அந்த அறியாமையை நீக்க கல்வி அவசியம்.
மீண்டும் சொல்கிறேன்... படிப்பு கெளரவமல்ல ஆனால் .அவசியம். இது புரிந்தால் நீங்கள் லட்சங்களை எடுத்துகொண்டு தனியார் பள்ளி வாசலில் நிற்கமாட்டீர்கள். படிக்க வேண்டிய வயதில் குழந்தைகளை படிக்க விடாமால் தடுக்கவும் மாட்டீர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக